தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும்
நீங்கா நிலனாள் பவர்க்கு.
காலம் தாழ்த்தாத தன்மை, கல்வியுடைமை, துணிவுடைமை என்று மூன்று பண்புகளும் நாடாளும் மன்னருக்கு நீங்காமல் இருத்தல் வேண்டும்.