தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்
தன்நெஞ்சே தன்னைச் சுடும்.
ஒருவன் தன் நெஞ்சு அறிவதாகிய ஒன்றைக் குறித்துப் பொய் சொல்லலாகாது; அப்படிப் பொய் சொன்னால் அவனுடைய நெஞ்சமே அவனை வருத்தும்.