மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
பழித்தது ஒழித்து விடின்.
உலகம் பழிக்கும் தீச்செயல்களைத் தவிர்த்துவிட்டால் மொட்டையடித்துக் கொள்ளலும் சடையைச் செயற்கை முறையில் வளர்த்துக் கொள்ளலும் வேண்டா.