தோன்றின் புகழோடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று.
உலகத்தார் முன்பாக ஒருவர் தோன்றினால் புகழோடுதான் தோன்ற வேண்டும். அத்தகைய சிறப்பு இல்லாதவர் தோன்றுவதைவிடத் தோன்றாமல் இருப்பதே நல்லது.