சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தினுஉங்கு
ஆக்கம் எவனோ உயிர்க்கு.
அறம் சிறப்பையும் அளிக்கும்; செல்வத்தையும் அளிக்கும்; ஆகையால், உயிர்க்கு அத்தகைய அறத்தைவிட நன்மையானது வேறு யாது?