தயிர் உருளை
தேவையானவை: சிறிய உருளைக்கிழங்கு - அரை கிலோ, பெரிய வெங்காயம் - 2,சற்று புளித்த தயிர் - அரை கப், இஞ்சி - பூண்டு விழுது - 2 டீஸ்பூன்,மிளகாய்தூள் - அரை டீஸ்பூன், மிளகுதூள் - அரை டீஸ்பூன், கரம்மசாலா - அரைடீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், எண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன், உப்பு -தேவைக்கு.
செய்முறை: உருளைக்கிழங்கை வேகவைத்து தோலுரித்துக் கொள்ளுங்கள். பெரியவெங்காயத்தை பொடியாக நறுக்குங்கள். எண்ணெயைக் காயவைத்து வெங்காயத்தைசேர்த்து நன்கு நிறம் மாறும்வரை வதக்குங்கள். பின்னர் மிளகாய்தூள், மிளகுதூள்,மஞ்சள்தூள், உப்பு, உருளைக்கிழங்கு சேர்த்து சிறு தீயில் 10 நிமிடம் நன்குவதக்குங்கள். பின்னர் தயிர், கரம் மசாலா சேர்த்து சுருளக் கிளறி இறக்குங்கள்.பிரெட், சப்பாத்தி, பூரிக்கு சூப்பரான சைட் டிஷ் இந்த தயிர் உருளை.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
தயிர் உருளை, 30 வகையான பக்க உணவுகள், 30 Type Side Dishes, டீஸ்பூன், தயிர், Recipies, சமையல் செய்முறை