பூசணி-மொச்சை கூட்டு

தேவையானவை: பொடியாக நறுக்கிய பூசணிக்காய் - ஒரு கப்,பச்சை மொச்சை - அரை கப், புளி - எலுமிச்சை அளவு,துவரம்பருப்பு - கால் கப், உப்பு - தேவையான அளவு,மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், பெருங்காயத்தூள் - கால்டீஸ்பூன், வறுத்து அரைத்த தனியா தூள் - ஒரு டேபிள்ஸ்பூன்,கடலைப்பருப்பு - ஒரு டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - ஒருடீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 5, தேங்காய் துருவல் - ஒருடேபிள்ஸ்பூன். தாளிக்க: எண்ணெய் - ஒரு டீஸ்பூன், கடுகு -கால் டீஸ்பூன், கொத்துமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு.
செய்முறை: குக்கரில் துவரம்பருப்பை வேகவைத்து எடுத்துக்கொள்ளவும். புளியை நன்றாகக்கரைத்து, அதில் பூசணிக்காய் துண்டுகளை முதலில் போட்டு, பிறகு மொச்சைப் பயறையும்உப்பையும் சேர்த்து வேகவிடவும். தனியா, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய்,பெருங்காயம்.. எல்லாவற்றையும் வறுத்து, தேங்காய் துருவல் சேர்த்து அரைத்து வெந்த காய்கலவையில் சேர்க்கவும். மஞ்சள்தூளையும் முதலில் வேகவைத்த துவரம்பருப்பையும் சேர்த்துநன்றாகக் கொதிக்கவிடவும். எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை, கொத்துமல்லி தாளித்துக் கொட்டிஇறக்கவும்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பூசணி-மொச்சை கூட்டு, 30 வகையான கூட்டு, 30 Type Koottu Poriyal, டீஸ்பூன், கால், Recipies, சமையல் செய்முறை