தக்காளிக்காய் தனிக்கூட்டு
தேவையானவை: சற்று பெரியதாக நறுக்கிய தக்காளிக்காய் - 2கப், பச்சை மிளகாய் - 3, காய்ந்த மிளகாய் - 3, தேங்காய்துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு, எண்ணெய் - ஒருடீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், பெருங்காயத்தூள் -கால் டீஸ்பூன், கடலை மாவு - ஒரு டீஸ்பூன். தாளிக்க: நெய் -ஒரு டேபிள்ஸ்பூன், கடுகு - கால் டீஸ்பூன், உளுத்தம்பருப்பு -கால் டீஸ்பூன், சீரகம் - கால் டீஸ்பூன், கறிவேப்பிலை -சிறிதளவு.
செய்முறை: முதலில் ஒரு டீஸ்பூன் எண்ணெயை வாணலியில்ஊற்றி, அதில் தக்காளிக்காய் துண்டுகளை போட்டு வதக்கவும்.வதங்கியதும் அதில் உப்பு, மஞ்சள்தூள் சேர்க்கவும். தேங்காய் துருவல், பச்சை மிளகாய், காய்ந்தமிளகாய் இவைகளை அரைத்து கொட்டவும். பிறகு, கடலைமாவை நீர்க்க கரைத்து அதில் ஊற்றி,கொதிக்க வைத்து இறக்கவும். நெய்யில் கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், கறிவேப்பிலை தாளித்துகொட்டவும். வித்தியாசமான சுவையுடன் அசத்தலாக இருக்கும் இந்தக் கூட்டு.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 10 | 11 | 12 | 13 | 14 | ... | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
தக்காளிக்காய் தனிக்கூட்டு, 30 வகையான கூட்டு, 30 Type Koottu Poriyal, டீஸ்பூன், கால், அதில், மிளகாய், Recipies, சமையல் செய்முறை