பயத்தங்கஞ்சி
தேவையானவை: பயத்தம்பருப்பு - கால் கப், தண்ணீர் - ஒரு கப், பால் - அரை கப், வெல்லம் (பொடித்தது) - கால் கப், ஏலக்காய்தூள் - ஒரு சிட்டிகை.
செய்முறை: பயத்தம்பருப்பை ஒரு கப் தண்ணீர் சேர்த்து மலர வேகவைக்கவும். வெல்லத்தை, அது மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்துக் கரையவிடவும். பிறகு அதை வடிகட்டி, பயத்தம்பருப்போடு சேர்க்கவும். அதில் பால், ஏலக்காய்தூள் சேர்த்து சாப்பிடவும். இரவு உணவுக்கு பதிலாக இந்தக் கஞ்சியை அருந்தினால், வயிற்றுக்கு நிறைவாக இருக்கும். விரதம் இருப்பவர்கள், இரவில் பயத்தங்கஞ்சி அருந்தினால் நல்லது.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 17 | 18 | 19 | 20 | 21 | ... | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பயத்தங்கஞ்சி, உஷ்ணத்தை குறைக்கும்... 30 வகை கஞ்சி!, 30 Type Kanji, தண்ணீர், Recipies, சமையல் செய்முறை