முதன்மை பக்கம் » பெண்கள் பகுதி » சமையல் » 30 வகையான இனிப்பு உருண்டை » அவல்பொரி-எள்-பொட்டுக்கடலை உருண்டை
அவல்பொரி-எள்-பொட்டுக்கடலை உருண்டை

தேவையானவை: அவல் - 4 கப், கறுப்பு எள் - 2 டேபிள்ஸ்பூன், பொட்டுக்கடலை - கால் கப், வெல்லம் -ஒன்றேகால் கப், அரிசி மாவு - சிறிதளவு.
செய்முறை: எள்ளை வெறும் கடாயில் வறுத்துக்கொள்ளுங்கள். பொட்டுக்கடலை நமுத்திருந்தால் மட்டுமே,வெறும் கடாயில் போட்டு சூடு வர வறுத்து எடுக்கவேண்டும். இல்லையென்றால், அப்படியேஉபயோகிக்கலாம். வெல்லத்தைப் பொடித்து, அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து கரையவிட்டு, கரைந்ததும்வடிகட்டி, மீண்டும் அடுப்பில் வைத்துக் கொதிக்கவிட்டு பாகு பதம் வந்ததும் இறக்குங்கள். (பாகை சிறிதுஎடுத்து தண்ணீரில் விடவேண்டும். பின் அதை எடுத்து உருட்டி தரையிலோ வேறு பாத்திரத்திலோ போட்டால்சத்தம் வரவேண்டும். வெல்லப்பாகு சேர்க்கும் எல்லா உருண்டைகளுக்குமே இதுதான் பாகு பதம்.)வறுத்த எள், பொட்டுக்கடலை, அவல் ஆகியவற்றை பாகில் கொட்டி, கிளறி சூடாக இருக்கும்போதே,அரிசிமாவைக் கைகளில் தடவிக்கொண்டு, உருண்டை பிடியுங்கள்.
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அவல்பொரி-எள்-பொட்டுக்கடலை உருண்டை, 30 வகையான இனிப்பு உருண்டை, 30 Type Inippu Urundai, பொட்டுக்கடலை, Recipies, சமையல் செய்முறை