அவல் பொரி உருண்டை

தேவையானவை: அவல் பொரி - 4 கப், வெல்லத்தூள் - 1 கப், தேங்காய் (பல்லுப் பல்லாகக் கீறியது) - கால்கப், எள் - 1 டேபிள்ஸ்பூன், அரிசிமாவு - சிறிதளவு, நெய் - 1 டேபிள்ஸ்பூன்.
செய்முறை: எள்ளை வெறும் கடாயில் வறுத்தெடுங்கள். தேங்காயை நெய்யில் சிவக்க வறுத்தெடுங்கள்.வெல்லத்துடன் கால் கப் தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து கொதித்ததும் வடிகட்டி, மீண்டும்கொதிக்கவிடுங்கள். பாகு பதம் வந்ததும், பொரி, தேங்காய், எள் சேர்த்து கிளறி இறக்குங்கள். அரிசி மாவுதொட்டு, சிறு உருண்டைகளாக உருட்டுங்கள்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 10 | 11 | 12 | 13 | 14 | ... | 29 | 30 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
அவல் பொரி உருண்டை, 30 வகையான இனிப்பு உருண்டை, 30 Type Inippu Urundai, , Recipies, சமையல் செய்முறை